நாட்டில் தற்போது 90 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோல் இருப்பு உள்ளது என்றும், அந்தக் கையிருப்பு சுமார் 20 நாள்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுமக்கள் பெற்றோல் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று கோரியுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனம், பெற்றோல் விநியோகம் சீராக நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
அதேவேளை, டீசல் கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளதால், இந்த நாள்களில் பெற்றோல் நிலையங்களுக்கு டீசல் விநியோகம் மிகவும் குறைவாகவே உள்ளது என்று தெரிவித்துள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எதிர்வரும் 28 அல்லது 29ஆம் திகதிகளில் 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலுடன் கப்பல் ஒன்று இலங்கை வருகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள இருப்புகள் அத்தியாவசியப் சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்குப் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post