இலங்கையின் பணவீக்கம் எதிர்வரும் மாதங்களில் 40 வீதமாக உயரும் என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் ரூபா இல்லாததால் ஒரு ட்ரில்லியன் ரூபா பணம் அச்சிட வேண்டி ஏற்படும் என்று தெரிவித்தார.
ரொய்ட்டர்ஸ் செய்தி முகாமைக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
6 வாரங்களுக்குள் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறிய அவர், உட்டுகட்டுமான வேலைத் திட்டங்கள் நிறுத்தப்பட்டு அவற்றுக்குரிய நிதி நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படும் என்றார்.
வரும் மாதங்களில் பெரும் நெருக்கடி ஏற்படும் என்று தெரிவித்துள்ள பிரதமர், மக்களின் போராட்டங்கள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
மக்கள் கோபத்தில் இருக்கும்போது போராட்டங்கள் நடத்தப்படுவது இயல்பானது என்று தெரிவித்த அவர், போராட்டங்கள் அரசியல் கட்டமைப்பைச் சிதைக்கும் வகையில் இருக்காது என்று கூறினார்.
Discussion about this post