பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கான உதவிகள் வழங்கப்படும் என்று சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (யுஎஸ் எய்ட்) தலைமை நிர்வாகி சமந்தா பவர் உறுதியளித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று கூறப்படுகின்றது.
இலங்கை மக்களுக்கான ஆதரவை வெளியிட்ட அவர், இலங்கை மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள், பொருளாதார அதிர்ச்சிகளை அனுபவிக்கும் அவர்களின் அவசர தேவைகளை நிவர்த்திசெய்வதற்கு இலங்கையில் யு.எஸ்.எய்ட் தனது திட்டங்களை முன்னிறுத்துகின்றது.
ரஷ்யாவின் தூண்டுதலற்ற உக்ரைன் மீதான யுத்தம் காரணமாக அதிகரிக்கும் எண்ணெய் உணவுப் பொருள்களின் விலைகளும் இந்த நிலையை தீவிரப்படுத்தியுள்ளன.
சர்வதேச நாணயநிதியம் போன்ற இலங்கைக்கு உதவும் சமூகத்துடன் அமெரிக்கா நெருக்கமாக இணைந்து பணியாற்றும் என்று சமந்தா பவர் பிரதமரிடம் உறுதியளித்துள்ளார் .
Discussion about this post