எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளமையால் பல பொருள்கள், சேவைகளின் கட்டணங்கள் உயரும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மதியம் 12 மணிக்குப் பின்னர் தனியார் பஸ் கட்டணங்கள் 25 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதலாவது ஒரு கிலோமீற்றருக்கு 100 ரூபா அறவிடப்படும் என்றும், தொடர்ந்து பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 80 ரூபா அறவிடப்படும் என்றும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதேநேரம், எரிபொருள் விலையேற்றத்தால் பாண் உட்பட பல அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post