கொழும்பு – விகாரமகாதேவி பூங்கா பகுதியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம பகுதிக்கு செல்லும் என்று கூறப்பட்டது.
கொழும்பு – கோட்டை, இலங்கை வங்கி வீதியை ஆர்ப்பாட்டப் பேரணி சென்றடைந்தபோது அங்கு பொலிஸார் தடைகளை ஏற்படுத்தினர். தடையை மீறி மாணவர்கள் முன்னேற முயற்ற நிலையில், பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அதேவேளை, சைத்தியம் வீதி மாவத்தை, இலங்கை வங்கி மாவத்தை, முதலிகே மாவத்தை ஆகிய பகுதிகளுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
Discussion about this post