எரிபொருள், எரிவாயு மற்றும் நீர் கட்டணங்களை மேலும் அதிகரிக்க மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் காரணமாகவே இது போன்ற பரிந்துரையைச் செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் வரி வருமானம் குறைவாக இருக்கின்றது என்றும், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், அரசாங்க வருமானத்தை அதிகரிக்க வேண்டியது அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post