பாடசாலைகளுக்கு 2022ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை இன்று வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட்டுள்ளது என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
விடுமுறை நிறைவடைந்து இரண்டாம் தவணைக் கற்றல் நடவடிக்கைக்காக பாடசாலைகள் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடுத்தே பாடசாலைகளுக்கும் விடுமுறை முற்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக க.பொ.த.சாதரணப் பரீட்சைக்காக எதிர்வரும் 23ஆம் திகதிமுதல் விடுமுறை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. எனினும் தற்போது இன்று முதல் விடுமுறை நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேவேளை, ஆசிரிய கலாசாலைகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்படாது என்றும், இந்தக் காலப்பகுதியில் அவர்கள் இணையவழிக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
Discussion about this post