இலங்கையில் இந்த ஆண்டுக்குள் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்றும் நாளாந்தம் உணவைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே இந்த எச்சரிக்கையை விடுத்த பிரதமர், இதற்குத் தீர்வு காண நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்று தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை உலகளாவிய ரீதியில் காணப்படுகின்றது என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, அதில் இலங்கையும் உள்ளடங்குகின்றது என்று குறிப்பிட்டார்.
நாட்டின் பல பகுதிகளில் உணவு கிடைக்காமல் போவதற்குரிய சாத்தியங்கள் காணப்படுகின்றன என்று கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உணவு தட்டுப்பாட்டைதவிர்க்க, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post