தென்னை மரம் பாறி வீழ்ந்ததில் அதில் சிக்குண்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. வண்ணார்பண்ணை, முருகமூர்த்தி வீதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் (வயது-80) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டு முற்றத்தில் கதிரையில் அமர்ந்திருந்தபோது, பலத்த காற்றால் தென்னைமரம் பாறி வீழ்ந்தது என்று தெரிவிக்கப்பட்டது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
Discussion about this post