முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று நாடாளுமன்றம் வருகை தந்திருந்தனர்.
மே – 09 தாக்குதல் சம்பவத்தின் பின்னர், 10 ஆம் திகதி காலை மஹிந்த ராஜபக்ச, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார். திருமலை கடற்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டார்.
அதன்பின்னர் அவர் பொதுவெளியில் தலைகாட்டவில்லை. சுமார் 9 நாட்களுக்கு பிறகே, இன்று நாடாளுமன்றம் வந்திருந்தார்.
ஆளுங்கட்சியில் முன்வரிசையில் மஹிந்தவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. நாமல் ராஜபக்ச இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தார்.
Discussion about this post