இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் பாதிப்புக்குள்ளான 71 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தலவத்துகொடவில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 100 வீடுகள் அமைக்கப்படுகின்றன.
அவற்றை விரைவாக நிறைவு செய்து, பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் தனித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. அதையடுத்தே நாடாளுமன்றம் தலையிட்டு அவர்களுக்கு வீடுகளை வழங்கத் தீர்மானித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post