இலங்கையில் திருமணத்திற்கு தயாரான மணமகன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தனது திருமண நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு திருமண அழைப்பிதழ் விநியோகிப்பதற்காக காரில் பயணித்த இளைஞன் விபத்துக்குள்ளாகி காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பட்டிகல பெரலபநாதர பகுதியைச் சேர்ந்த கசுன் லக்ஷான் (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்தவரின் திருமணம் மே 12ஆம் திகதி நடைபெறவிருந்தது. இவர் கடந்த முதலாம் திகதி மதியம் திருமண அழைப்பிதழ் விநியோகம் செய்வதற்காக நண்பருடன் பயணித்த போது ஊருபொக்க நகருக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோதி விபத்துக்குள்ளானார்.
காயமடைந்தவர் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி மகேஷ் தர்மரத்ன பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனை உதவி சட்ட மருத்துவ அதிகாரி பாபசர குணசிங்க தலைமையில் நடைபெற்றது.
சாட்சியங்கள் மற்றும் மருத்துவப் பதிவுகளை ஆராய்ந்த பின்னர், வாகன விபத்தில் மண்டை ஓடு மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றில் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
Discussion about this post