இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்கான காரணங்கள் திரட்டப்படுகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.
இராணுவத் தளபதி, அரச தலைவர் கோத்தாபய ராஜபக்சவுக்கு அறிவிக்காது, அமெரிக்க தூதுவரை சந்தித்தது அடிப்படைக் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறியமை, அநுராதபுரத்தில் உள்ள ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டலைப் பாதுகாக்கத் தவறியமை தொடர்பாகவும் சவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டலுக்கு பாதுகாப்பு வழங்காமை தொடர்பாக பல இராணுவ அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிய முடிகின்றது.
அதேநேரம், அரச தலைவருக்கும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பில், இராணுவ தளபதி மற்றும் பொலிஸ் அதிபர் ஆகியோருக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
Discussion about this post