“கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்களத்தில் உள்ளவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக 3 பேர் கொண்ட குழுவொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்க, ருவான் விஜேவர்த்தன மற்றும் பொலிஸ், இராணுவத்தைச் சேர்ந்த குழுவொன்று ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளது.
“கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக் களத்துக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தக் குழுவுக்குப் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடலில் “கோட்டா கோ கம” என்ற போராட்டத்தளம் உருவாக்கப்பட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Discussion about this post