யாழ்ப்பாணத்தில் மா மரத்தில் ஏறிக் கிளைகள் வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மானிப்பாய், சங்குவேலி தெற்கைச் சேர்ந்த நாகேந்திரம் நகுலேந்திரன் என்ற 48 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இவர் 6 பிள்ளைகளின் தந்தையாவார்.
மா மரத்தில் ஏறிக் கிளைகளை வெட்டியபோது, அவர் நின்ற கிளை முறிந்து சுமார் 25 அடி உயரத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.
அதில் சுயநினைவிழந்த அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தபோதும் சிகிச்சை பயனின்றி அவர் ஏற்கனவே உயிரிழந்தமை மருத்துவ பரிசோதனைகளில் அறியப்பட்டது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.
Discussion about this post