பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைக்கவுள்ள அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை என்று பிரதான எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன இந்த அறிவிப்பை விடுத்துள்ளன.
அதேநேரம் முன்னைய அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படும் விமல் வீரவன்ஸ், உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் சுயாதீனமாகச் செயற்படும் கட்சிகளும் இந்த முடிவிலேயே உள்ளனர் என்று கூறப்படுகின்றது.
எதிர்கட்சிகளின் இந்த முடிவால் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைக் கொண்ட அமைச்சரவையே பதவியேற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு அரசியல் தற்போது பரபரப்பாகக் காணப்படும் நிலையில், கட்சி தாவல்கள் பல நடக்கலாம் என்ற தகவலும் கொழும்பு வட்டாரத்தில் பேசப்படுகின்றது.
Discussion about this post