முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றன.
2009 ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட மனித அவலத்தை வெளிப்படுத்தும் வகையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கும் நிகழ்வு முள்ளிவாய்க்கால் வாரத்தில் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்று யாழ்ப்பாணம் நல்லூரில், முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில், இன்று முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.
அதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்படவுள்ளது.
Discussion about this post