ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்துக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் நேற்றுப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டபின்னர், ரணில் விக்கிரமசிங்க மத வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“கோத்தா கோ கமவில் கைவைக்க மாட்டோம். நாடு கட்டியெழுப்பப்பட்டு இளம் தலைமுறையினருக்குச் சிறப்பான எதிர்காலம் உருவாக்கப்படும்.
ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தப்படும். இன்று அமைச்சரவை நியமிக்கப்படாது.” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
Discussion about this post