இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சில நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோத்தாபயவுக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் ஜனாதிபதி பதவி விலகல், 21ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றம், நிறைவேற்று அதிகார முறைமை ஒழித்தல், இயல்பு நிலைமை திரும்பியவுடன் பொதுத் தேர்தலை நடத்துவது ஆகிய நான்கு நிபந்தனைகள் சஜித் பிரேமதாசவால் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால் மட்டுமே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என்று சஜித் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இவரது இந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக நேற்றிரவு அறிவித்திருந்தார்.
Discussion about this post