கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம்காலை 9.30 மணிக்கு இன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இணையவழியே நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த சபாநாயகர், அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடைபெறும் கூட்டம் சட்டபூர்வமானது அல்ல என்று கூறியிருந்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதை மறுத்ததுடன், கூட்டம் சட்டபூர்வமானதே என்று விளக்கியுள்ளார்.
அதன்பின்னர் கருத்துத் தெரிவித்த சபாநாயகர், இணையவழியில் நடக்கும் கூட்டத்தை சட்டபூர்வமானதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கூட்டம் நேரடியாக நடத்தப்பட வேண்டும் என்று கூறியதை அடுத்து, இன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post