காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை முன்பாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமை தொடர்பாக மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரதானி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவால் கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட ஆதரவாளர்களே காலி முகத் திடலிலும், அலரி மாளிகைக்கு அருகேயும் வன்முறைகளை ஆரம்பித்தனர்.
அதன்பின்னர் ஆத்திர மேலீட்டால் மக்கள் ஸ்ரீலங்கா பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமுன்ற உறுப்பினர்கள், பிரதேச மட்ட அரசியல்வாதிகளின் வீடுகளைத் தாக்கித் தீயிட்டனர். அதனால் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரதானி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விசாரணைகளின் தொடர்ச்சியாகவே மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரதானிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post