அமைதியான முறையில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை பொலிஸ் மா அதிபரிடம் சட்டத்தரணிகள் முன்வைத்துள்ளனர்.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
கொழும்புக்கு கூட்டம் ஒன்றுக்கெனத் தனது பிரதேச மட்ட ஆதரவாளர்களைக் கொழும்புக்கு அழைத்த மஹிந்த ராஜபக்ச வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
Discussion about this post