நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு ஜனாதிபதி எவ்வாறு பதிலளிக்கின்றார் என்பதை அடிப்படையாகக் கொண்டே எம்மால் தீர்க்கமானதொரு முடிவுக்கு வர முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்க்கட்சி தலைவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை இதற்கு முன்னரே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய தீர்மானமாகும்.
தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மிகவும் கால தாமதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் முறையானதொரு தரப்பினரின் தலையீட்டுடன் இது தொடர்பில் அரச தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராக உள்ளோம்.-என்றார்.
Discussion about this post