அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
நாட்டில் அமைதியான முறையில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், எதற்காக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் அரசு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் விளக்கம் பெறுவதற்காக ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் நாளை மறுதினம் திங்கட்கிழமை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் கருத்து சுதந்திரம், போராடும் உரிமை என்பன பாதுகாக்கப்பட வேண்டும், அவை சவாலுக்குட்படுத்தப்படுவது ஏற்புடைய நடவடிக்கையாக அமையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று (06) நள்ளிரவு முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தவும், மக்களை பாதுகாக்கும் நோக்கிலும், அத்தியாவசிய சேவையை தடையின்றி முன்னெடுப்பதற்காகவுமே அரசமைப்பில் தனக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் ஜனாதிபதி அவசரகால நிலையை பிரடகனப்படுத்தினார் அரச அரசு அறிவித்துள்ளது.
அதேவேளை, அவசர கால சட்டத்தை உடன் இரத்து செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசரகால நிலை பிரகடனம் குறித்து வெளிநாட்டு தூதுவர்களும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
Discussion about this post