ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்துக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் பொது அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடத்தப்பட்டதில் நாட்டின் இயல்பு நிலைமை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் அதிகரித்து வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியால் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
முன்னரும் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு, அதற்குக் கடும் எதிர்ப்புகள் தோன்றியிருந்த நிலையில், பின்னர் அது நீக்கப்பட்டிருந்தது.
Discussion about this post