இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண 2 ஆண்டுகள் தேவைப்படும் என்று நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றியபோதே நிதி அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
நாட்டின் பிரச்சினையை ஒரு மாதத்தில் தீர்க்க முடியும் என்று கூறினால் நான் பைத்தியக்காரன் என்று தெரிவித்த நிதி அமைச்சர் நாம் சில தவறுகளைச் செய்துள்ளோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
வரிகளை அதிகரிக்க வேண்டிய காலத்தில் நாம் அதைக் குறைத்து தவறிழைத்துள்ளோம் என்று தெரிவித்த நிதி அமைச்சர் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க 2 ஆண்டுகள் தேவைப்படும் என்றார்.
Discussion about this post