சாவகச்சேரியில் நேற்று அதிகாலை நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கச்சாய் வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் திசாந்தன் (வயது-33) என்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.
சாவகச்சேரி , அஞ்சலக வீதிச் சந்தியில் அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
கொடிகாமத்தில் நடந்த திவசம் ஒன்றுக்குச் சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பியபோது, யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த தனியார் நிறுவனம் ஒன்றின் கப் ரக வாகனத்துடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார்சைக்கிளில் பயணித்த திசாந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடல் சாவகச்சேரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கப் ரக வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post