வீழ்ச்சியடைந்து வரும் நாட்டின் பொருளாதார நிலைமையை மக்கள் போராட்டங்கள் மேலும் மோசமாக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு இளைஞர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தியாகங்களைச் செய்து நாட்டை அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு இருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post