நடைமுறைப்படுத்த தயாராகி வரும் இடைக்கால அரசாங்கம் என்பது என்ன என்பதை ஜனாதிபதி விளக்க வேண்டும் என்று என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இது தொடர்பில் தெரிவித்தபோது –
இடைக்கால அரசாங்கத்தில் பங்கு கொள்வதா இல்லையா என்பதை அதன் பின்னர் தீர்மானிக்க முடியும். இடைக்கால அரசாங்கம் என்பது அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத புதிய எண்ணக்கரு.
இதனால் எந்த விதத்தில் அது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை கட்சி என்ற வகையில் நாங்கள் முதலில் அறிந்துக்கொள்ள வேண்டும்.
இது சம்பந்தமாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு விளக்கவில்லை. ஜனாதிபதியை சந்தித்து இது சம்பந்தமாக அவரது கருத்தை அறிய எதிர்பார்த்துள்ளோம்.
பொதுஜன பெரமுனவின் இந்த நிலைப்பாடு ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு எதிரானது அல்ல. எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி, மாநாயக்க தேரர்களின் விசேட பொறிமுறையை நடைமுறைப்படுத்த இணங்கியமை சாதகமான நிலைமை.
இடைக்கால அரசாங்கம் தொடர்பாக ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு குறித்து பொஜன பெரமுன சிறப்பு கவனத்தை செலுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
Discussion about this post