இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவிருந்த சர்வகட்சி பேச்சு பிற்போடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி அண்மையில் கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில் நேற்று இரவு பிரதமருடனான சந்திப்பின் போது ஆளுங்கட்சி சார்பாக 109 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டதைத் தொடர்ந்து, பிரதமருக்கு ஆதரவாக 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பது உறுதியாகியுள்ளது என்று நம்பப்படுகிறது.
அதையடுத்து இன்று இடம்பெறவிருந்த சர்வகட்சிகளுடனான சந்திப்பை ஜனாதிபதி திடீரென ஒத்திவைத்துள்ளார்.
Discussion about this post