நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் நேற்று நள்ளிரவு முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்த அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டம் இன்று நள்ளிரவுரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில், நேற்று நள்ளிரவு முதல் அடுத்துவரும் 24 மணித்தியாலயங்களுக்கு நாட்டில் தபால் சேவைகள் எவையும் இயக்காது என்று ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
Discussion about this post