பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஒருபோதும் தன்னிடம் கூறவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பதவி விலகுமாறு இதுவரை அவர் எனக்குக் கூறவில்லை, இனிக் கூறப் போவதுமில்லை என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை நேற்று அலரி மாளிகையில் சந்தித்தபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகக்கூடாது என்று உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் மாவட்ட தலைவர்களும் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர் என்று பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post