உலகிலேயே அதிக பணவீக்கமுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை இலங்கை பெற்றுள்ளது என்று அமெரிக்காவின் ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் தொடர்பான பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கி தெரிவித்துள்ளார்.
அவர் இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரியில் வெளியிட்ட பணவீக்க பட்டியலில், இலங்கை ஆறாவது இடத்தில் இருந்தது.
பேராசிரியர் ஸ்டீவ் ஹென்றியின் அறிக்கையின்படி இலங்கையில் பணவீக்கம் 17.5 வீதத்திலிருந்து இருந்து 119 வீதமாக அதிகரித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி இலங்கை சிம்பாப்வேக்கும் லெபனானுக்கும் அடுத்த படியாக இருக்கிறது.
சிம்பாப்வேயின் பணவீக்கம் 207 வீதமாகும் , லெபனானின் பணவீக்கம் 150 வீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post