கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக “மைனா கோ கம” என்ற பெயரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
“மைனா கோ கம” என்று பெயர் சூட்டித் தொடர்ச்சியாக அங்கு போராட்டம் முன்னெடுக்கப்படும், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
“மைனா கோ கமவை” கலைப்பதற்காக பொலிஸார் கோட்டை நீதிமன்றில் நேற்றுமுன்தினம் மனுத் தாக்கல் செய்திருந்தபோதும், பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
பஸிலை காகம்( கப்புடா) எனவும், மஹிந்தவை மைனா எனவும் சிங்கள மக்கள் அண்மைக்காலமாக அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post