தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாவின் மதிப்பு மிதக்க விடப்பட்டதில் இருந்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயற்பாட்டுச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
தகவல் தொடர்பு கோபுரங்களை பராமரிக்க தேவையான ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு எரிபொருள் நுகர்வு தேவைப்படுகின்றது என்றும், எரிபொருள் விலை அதிகரிப்பு தொலைத்தொடர்பு துறையிலும் நேரடி மற்றும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தகவல் தொடர்பு மையங்களுக்குத் தேவையான அனைத்து கருவிகளும் இறக்குமதி செய்யப்படுவதால், இணைப்புகளைப் பராமரிப்பதில் கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Discussion about this post