ஜனாதிபதி கோத்தாபயவுக்கும், ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர் களுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று நேற்று (25) இரவு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டனர் என்று தெரியவருகின்றது.
நாட்டில் நிலவும் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்படுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் நேற்று நள்ளிரவு வரை நீடித்துள்ளபோதும், கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
Discussion about this post