எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனைத் தெரிவித்தார்.
தற்போது சேவையில் ஈடுபடும் பாரவூர்திகளின் எண்ணிக்கையும் 60 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் பகிர்ந்தளிக்க முடியாத நிலையில் துறைமுகத்தில் தேங்கியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Discussion about this post