ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி முல்லைத்தீவு, முள்ளியவளையில் இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம், எரிபொருள்களின் விலையேற்றம், தட்டுப்பாடு, இரசாயனப் பசளைகளை இல்லாமல் செய்தமை, சீமெந்தின் விலையேற்றம், சமையல் எரிவாயு இன்மை, விலையேற்றம், நாளாந்தம் பொருள்களின் விலையேற்றம் என்பவற்றால் மக்கள் நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு நகர்த்த முடியாது தவிக்கின்றனர்.
அதையடுத்து நாடு முழுவதும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முள்ளியவளையிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக இருந்து கண்டணப் பேரணி ஆரம்பமானது.
பேரணி முள்ளியவளை முல்லைத்தீவு வீதியூடாக தண்ணீரூற்று, நெடுங்கேணி சந்தியைச் சென்றடைந்து அங்கிருந்து முல்லைத்தீவு வீதி ஊடாக நீராவிப்பிட்டி மாஞ்சோலையைச் சென்றடைந்தது.
Discussion about this post