கொழும்பு மருத்துவ வழங்கல் பிரிவில் 525 மருந்துகள் மற்றும் 5 ஆயிரத்து 376 சத்திர சிகிச்சை உபகரண வகைகள் தீர்ந்துள்ளன என்று அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவ விநியோகப் பிரிவில் இருக்க வேண்டிய மருந்து வகைகளில் 50 சதவீதமானவை தீர்ந்து போயுள்ளன என்று அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாட்டில் அத்தியாவசியமான 70 மருத்து வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்துகள் கையிருப்பில் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அவற்றை உடனடியாக விநியோக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் கோரியுள்ளது என்று தெரியவருகின்றது.
Discussion about this post