இலங்கையில் அரசியல் நெருக்கடி தீவிரமாகியுயுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கைச் சந்தித்துத்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இவர்களின் சந்திப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2019ஆம் ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணகர்த்தவாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அதன்பின்னர் ஆட்சியாளர்களின் போக்கால் அதிருப்தி அடைந்து, அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகியிருந்தார்.
தற்போது நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையிலும், நாடு முழுவதும் ராஜபக்ச அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையிலும் சந்திரிகா மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு முக்கியம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.
இந்தச் சந்திப்புத் தொடர்பாகத் தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதர், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post