எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியாவிடமிருந்து மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது என்று வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பங்களாதேஷிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலரை மீள செலுத்தும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை ஏற்கனவே இந்தியா வழங்கியுள்ளது என்று தெரிவித்த வௌிவிவகார அமைச்சர், மறுபுறத்தில் சீனாவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் ஜப்பான், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், ஓமான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புகளை பெறுவது தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு 6 மாதங்களுக்குள் பகுதி, பகுதியாக கிடைக்கும் எனவும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஒதுக்கீடுகளை தயார் செய்ய வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post