இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஆதரவை மீளப் பெற்று சுயாதீனமாகச் செயற்படுவோம் என்று ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர்.
தங்கள் தீர்மானத்தை எழுத்துமூலம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள அவர்கள், இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்து பிரதமர் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை நியமிக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது அமைச்சுப் பதவிகள் உரிய முறையில் வழங்கப்படவில்லை் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், புதிய அமைச்சரவை நியமனத்துக்கு தங்கள் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, இந்தக் குழு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
இந்தக் குழு அரசாங்கத்துக்கு் வழங்கும் ஆதரவை விலக்கிக் கொண்டால் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை இழக்கும் என்பது குறிப்பிடக்கத்தது.
Discussion about this post