அனைத்து கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தால் பதவி விலகத் தயார் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும், எதிர்க் கட்சிகள் வலியுறுத்திவரும் நிலையிலும் ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று கூடியபோது சபாநாயகர் இந்தத் தகவலை வெளிப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாங்கள் அதற்குத் தயார் என்றும், ஜனாதிபதிக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
Discussion about this post