இலங்கையில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மருந்துப் பற்றாக்குறையால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகின்றது.
குருநாகல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் மருந்துப் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
ஆனால் சுகாதார அமைச்சு இதனை மறுத்துள்ளது. நாட்டில் மருந்துத் தட்டுப்பாட்டால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கை முழுவதுமுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள என்று மருத்துவர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர்.
Discussion about this post