இலங்கையில் எரிபொருளுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், நாடு முழுவதும் இன்று பொதுமக்களின் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இலங்கையில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலையில், மக்கள் எரிபொருளைப் பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. அதேநேரம், நேற்று இரவு முதல் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாகப் பல பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்த மக்கள் பொறுமை இழந்து இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் வீதிகளை மறித்து ரயர்களைக் கொழுத்து மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
ரம்புக்கன, காலி, இரத்தினபுரி, திகன, மஹியங்கனை, மாத்தறை, மாத்தளை, அனுராதபுரம், அக்குரஸ்ஸ, சிலாபம், கடுகஸ்தோட்டை, தெல்தெனிய, பாணந்துறை, அவிசாவளை உக்வத்த, கேகாலை, ஜிந்தோட்ட, மாதம்பே, மாவனல்ல, தியத்தலாவ, அழுத்கம, ஹப்புத்தளை, பண்டாரவளை, தம்புள்ளை, மஹனுவர, கட்டுநாயக்க, பேருவளை ஆகிய இடங்களில் மக்கள் போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உட்பட தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் பதவி விலகிச் செல்ல வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் பதவியில் இருந்து விலக மறுத்துள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, நேற்று புதிய அமைச்சரவை ஒன்றை நியமித்துள்ளார்.
Discussion about this post