நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தை முன்வைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.
இந்த தகவலை பிரதமரின் ஊடகப்பிரிவு நேற்று உறுதிப்படுத்தியது.
நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்க சபை போன்றே நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் எதிர்பார்த்துள்ளார் என பிரதமரின் ஊடகப்பிரிவு விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தற்போது அமுலில் உள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி, 19 இல் இருந்தவாறு ஜனாதிபதிக்கான அதிகாரங்களை வழங்குவதற்கு பிரதமரால் 21 ஆவது சட்டமூலம் முன்வைக்கப்படும் என தெரியவருகின்றது. சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டால் பஸில் ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்க வேண்டிவரும்.
இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் , நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு, தேர்தலில் போட்டியிடுவதற்கு 19 இல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் கீதா குமாரசிங்கவுக்கு எம்.பி. பதவியை இழக்க நேரிட்டது.
எனவே, இரட்டை குடியுரிமை கொண்ட பஸிலும் பதவியை இழக்க வேண்டிவரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post