அதேவேளை, சுயாதீனமாக செயற்படபோவதாக அறிவிப்பு விடுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும், அரசுக்கு நேசக்கரம் நீட்டி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊவாக ‘அதிஉயர்’ சபைக்கு தெரிவான – சுதந்திரக்கட்சி உறுப்பினரான கலாநிதி சுரேன் ராகவனே, இவ்வாறு கல்வி சேவை மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சை ஜனாதிபதி முன்னிலையில் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரச்சார செயலாளராக செயற்பட்ட சாந்த பண்டாரவும், அரசுக்கு ஆதரவு வழங்கி விவசாயத்துறை இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் நாடாளுமன்றத்தில் தற்போது சுதந்திரக்கட்சி பக்கம் 12 எம்.பிக்களே உள்ளனர்.
அத்துடன், அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாருக்கும் இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post