நாட்டின் பெறுமதி மிக்க சொத்துக்களைக் குத்தகைக்கு வழங்குவதன் ஊடாக 8 பில்லியன் அமெரிக்க டொலரை உடனடியாகத் திரட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குத்தகைக்கு வழங்கப்படவுள்ள சொத்துக்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் என்பவையும் அடங்கும். இவை நீண்ட கால குத்தகைக்கு விடப்படவுள்ளன என்று கூறப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொழும்பு துறைமுகத்தின் தெற்குப் பகுதி 600 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு அடிப்படையில் குத்தகைக்கு விடப்படவுள்ளது என்றும், கொழும்பு துறைமுக நகரத்தில் அரசாங்கத்துக்கு சொந்தமான பங்கு 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளது என்றும் கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் அரசுக்குச் சொந்தமான தொகுதி 500 மில்லியன் டொலருக்கும், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அரச பங்குகள் 300 மில்லியன் டொலருக்கும் குத்தகைக்கு விடப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post