நாட்டின் ஆட்சியை ஒரு வருடத்துக்கு தமிழ் தரப்புக்கு வழங்குங்கள் ஒரு வருடத்தில் இந்த நாட்டை நிமிர்த்திக் காட்டுகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐனாதிபதியாகும் தகுதி கோத்தாபய ராஜபக்சவுக்கு இல்லை என்று எமது மக்கள் வாக்குகள் மூலம் அன்றே ஆருடம் சொல்லியிருந்தார்கள் இப்போது சிங்கள மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
எமது போராட்டம் நியாயமானது என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் போராட்டக்காரர்களால் வெளிப்படையாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ள அவர், நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சிங்கள மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். தமிழ்தரப்புக்கு ஆட்சியை ஒரு வருடம் வழங்குங்கள். ஒரு வருடத்தில் இந்த நாட்டை நிமிர்த்திக் காட்டுகின்றோம் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post