காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக கடவத்தை பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
கடவத்தையில் உள்ள இந்த இராணுவ கமாண்டோ படைப் பிரிவின் முகாமில் தற்போது காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எழுப்பி வரும் கோசத்தை கூறியவாறு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ள அவர், இந்த நபர்கள் காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தி வருவோர் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இது கடவத்தை கமாண்டோ படைப் பிரிவின் முகாமில் நடத்தப்படும் பயிற்சி என்பதை பொறுப்புடன் கூறுகிறோம் என்று தெரிவித்த துமிந்த நாகமுவ, இந்த முகாமில் நடத்தப்படும் பயிற்சி தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post